திரிபுராவின் செபாஹிஜாலா மாவட்டத்தின் கீழ் இந்தியா-பங்களாதேஷ் எல்லைகளின் வெவ்வேறு இடங்களில் நேற்று (மே 9) அதிகாலை எல்லை பாதுகாப்பு படையினர் கடத்தல் தடுப்பு சோதனைகளில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, அந்த வழிகளில் கடத்தப்பட்ட 25 கால்நடைகள், 16 கிலோ கஞ்சா, 25 மது பாட்டில்கள், தடைசெய்யப்பட்ட பென்செடில், 38 ஸ்மார்ட் போன்கள், இரண்டு இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல பொருள்களை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு 14 லட்சத்து 38ஆயிரத்து 772 ரூபாய் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்டவர்களை அந்தந்த பகுதிகளில் பணிகளில் ஈடுபட்ட பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.