ஜம்மு: இன்று (ஜூலை.02) அதிகாலை 4:25 மணியளவில் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் கண்காணிப்பு ட்ரோன் விமானம் ஒன்று நுழைய முயன்றது. இதனை உடனடியாகக் கண்டறிந்த பாதுகாப்புப் படையினர் அந்த விமானத்தை நோக்கி சுட்டுள்ளனர்.
இது குறித்து அலுவலர் கூறுகையில், "ஜம்முவின் அர்னியா பகுதியில் இன்று பாகிஸ்தான் ராணுவத்தின் குவட்காப்டர் விமானம் நுழைய முயன்றது. இதைக் கண்ட எல்லை பாதுகாப்பு படையினர் அந்த விமானத்தை நோக்கிச் சுட்டனர்.
இதையடுத்து அந்த விமானம் பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு திரும்பிச் சென்றது. எல்லைப் பகுதியை கண்காணிப்பதற்காக இந்த விமானம் அனுப்பப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய விமானப் படை தளத்தில் ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் எப்போதும் உஷார் நிலையில் இருந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரை வட்டமிட்ட ட்ரோன்கள்- பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிப்பு!