ETV Bharat / bharat

ஜம்முவில் துப்பாக்கிச்சூடு; எல்லைப் பாதுகாப்பு படை வீரர் காயம்!

Pak troops open fire in Jammu: பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய எதிர்பாராத துப்பாக்கிச்சூட்டில் பிஎஸ்எப் வீரர் உள்பட நான்கு பொதுமக்கள் காயம் அடைந்து உள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Oct 27, 2023, 9:33 AM IST

ஜம்மு: ஜம்முவில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட முன்னறிவிப்பில்லாத துப்பாக்கிச்சூட்டில் ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரர் மற்றும் 4 பொதுமக்கள் காயம் அடைந்து உள்ளதாக, ராணுவ மூத்த அதிகாரி தெரிவித்து உள்ளார். இந்த தாக்குதல் நடந்த பகுதிகள், சர்வதேச எல்லையில் உள்ள் அர்னியா மற்றும் ஆர் எஸ் புரா செக்டார் பகுதிகள் ஆகும்.

  • #WATCH | Locals recover mortal shells in the border village of Bulleh Chak after unprovoked firing by Pakistan along Jammu border in Arnia of RS Pura sector

    A local says, "We have found three mortar shells so far after overnight shelling from the Pakistan side. No person has… pic.twitter.com/xkZRb2xu6b

    — ANI (@ANI) October 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், நேற்று (அக்.26) இரவு 8 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் முன்னறிவிப்பு இல்லாத துப்பாக்கிச்சூட்டை நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலின்போது காயம் அடைந்த பிஎஸ்எப் வீரர் ஒருவர், ஜம்முவில் உள்ள ஜிஎம்சி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அதிலும், பாகிஸ்தான் ராணுவத்தினர் மோடார் குண்டுகளை குடியிருப்பு பகுதிகளை நோக்கி சுட்டுள்ளனர். குறிப்பாக, சர்வதேச எல்லையை ஒட்டி உள்ள அர்னியா, சச்கார், சியா, ஜபோவல் மற்றும் டிரேவா ஆகிய பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதனால், அர்னியா மற்றும் ஜபோவால் பகுதியில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

மேலும், இந்த தாக்குதலில் ஆர் எஸ் புரா செக்டார் பகுதியில் உள்ள வீடு பலத்த சேதத்துக்கு உள்ளாகி உள்ளது. மேலும், மோடார் குண்டுகளை உள்ளூர்வாசிகள் சிலர், தங்களது வயல்வெளிகளில் கண்டெடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க: அம்பத்தூரில் போலீசாரை அடிக்க துரத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பு.. 5 வடமாநில தொழிலாளர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.