பீகார் மாநிலம் சரன் மாவட்டத்திலுள்ள சாப்ரா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் காஜல். இவருக்கு தாஜ்பூர் சேலம்பூரைச் சேர்ந்த பங்கஜ் மஹதோ என்பவருக்கும் 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததில் இருந்து மணமகனின் வீட்டார் காஜலிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு மணமகன் வீட்டாரிடம் இருந்து, காஜலின் கை அறுக்கப்படும் வீடியோ பெண் வீட்டாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், மணமகனின் வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, காஜல் வீட்டில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு மாயமானதாக மணமகன் வீட்டார் தெரிவித்துள்ளனர். இதில் சந்தேகமடைந்த பெண் வீட்டார் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் காஜலை தேடிவந்த நிலையில், அவரது உடல் தாஜ்பூர் என்னும் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணையில், அவர் வரதட்சணைக்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது. அதனடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 5 வயது சிறுமிக்கு லிப்டில் பாலியல் வன்கொடுமை : ஏசி மெக்கானிக் கைது