ETV Bharat / bharat

தெலங்கானா பிஆர்எஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கோத்தா பிரபாகர் ரெட்டிக்கு கத்திகுத்து!

BRS MP Kotha Prabhakar Reddy attack: பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் டுப்பாக்கா தொகுதி வேட்பாளருமான கோத்தா பிரபாகர் ரெட்டியை இன்று (அக்.30) தத்தாணி ராஜு என்ற நபர் கத்தியால் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

brs-mp-and-duubbaka-nominee-kotha-prabhakar-reddy-attacked-during-poll-campaign
தெலங்கானா பிஆர்எஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கோத்தா பிரபாகர் ரெட்டிக்கு கத்திகுத்து!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 4:11 PM IST

Updated : Oct 30, 2023, 4:37 PM IST

டுப்பாக்கா(தெலங்கானா): சித்திபேட்டை மாவட்டம், தௌலதாபாத் மண்டலம், சூரப்பள்ளி பகுதியில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் டுப்பாக்கா தொகுதி வேட்பாளருமான கோத்தா பிரபாகர் ரெட்டியை இன்று (அக்.30) தத்தாணி ராஜு என்ற நபர் கத்தியால் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோத்தா பிரபாகர் ரெட்டி சூரப்பள்ளி பகுதியில் இன்று (அக்.30) பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். அப்போது அப்பகுதியிலுள்ள மதபோதகர் வீட்டிற்குச் சென்று பிரச்சாரம் செய்து வெளியே வந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டுள்ளார். இதில் அவருக்கு வயிற்றுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

சூரப்பள்ளி பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கைகுலுக்குவது போல் வந்த தத்தாணி ராஜு திடீர் எனத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து கோத்தா பிரபாகர் ரெட்டியை தாக்கினார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் வயிற்றுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டது உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர்கள் அவரை அருகிலிருந்த கஜ்வெல் மருத்துவமனையில் சேர்த்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கோத்தா பிரபாகர் ரெட்டியை தாக்கியவர் தத்தாணி ராஜு என்றும் அவர் மிருதொட்டி பகுதியிலுள்ள பெட்பயல கிராமத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் யூடியூப் சேனல் ஒன்றில் பத்திரிக்கையாளராக பணியாற்றி வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் தத்தாணி ராஜுயை பிஆர்எஸ் நிர்வாகிகள் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பிஆர்எஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோத்தா பிரபாகர் ரெட்டிக்கு கஜ்வேலிலுள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின் உயர் சிகிச்சைக்காக ஹைதராபாத்திலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பிஆர்எஸ் அமைச்சர் ஹரிஷ் ராவ் உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் கோத்தா பிரபாகர் ரெட்டியின் குடும்பத்தினரை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு உடல் நிலை குறித்துக் கேட்டறிந்தார். மேலும் இச்சம்பவத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரகுநந்தன் ரெட்டிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி பிஆர்எஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தெலங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம், தௌலதாபாத் மண்டலம், சூரப்பள்ளி பகுதியில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் டுப்பாக்கா தொகுதி வேட்பாளருமான கோத்தா பிரபாகர் ரெட்டியைக் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவருக்கு செகந்திராபாத் யசோதா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்லி வரி கொள்கை மோசடி வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Last Updated : Oct 30, 2023, 4:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.