ETV Bharat / bharat

Bihar: பிகாரில் புதிய பாலம் இடிந்து விபத்து - கடந்த ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?

author img

By

Published : Jul 21, 2023, 12:37 PM IST

பிகார் மாநிலம் ககாரியாவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Bihar: பிகாரில் புதிய பாலம் இடிந்து விபத்து - கடந்த ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?
Bihar: பிகாரில் புதிய பாலம் இடிந்து விபத்து - கடந்த ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?

ககாரியா (பிகார்): பிகார் மாநிலத்தில் அடிக்கடி பாலம் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், பிகார் மாநிலம் ககாரியா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 31இல் புதி கந்தாக் என்ற ஆற்றின் மேல் புதிதாக பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு முறையான திறப்பு இல்லாமல், போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2017ஆம் ஆண்டு லோயல் பிரிட்ஜ் கம்பெனி (Loyal Bridge Company) மூலம் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானம் நடப்பு ஆண்டில் முடிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், நேற்று (ஜூலை 20) காலை இந்த பாலத்தின் ஒரு பகுதி மட்டும் இடிந்து விழுந்து உள்ளது. இருப்பினும், இதனால் எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இது தொடர்பாக பேசிய ககாரியா மாவட்ட வளர்ச்சி குழுமத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார், “பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட உடன் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பாலம் எவ்வாறு இடிந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், பாலத்தின் மேல் மேற்கொள்ளப்பட்டு வரும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது” என தெரிவித்தார்.

தற்போது இடிந்து உள்ள பாலம் ககாரியா பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது. அது மட்டுமல்லாமல், பிகார் மாநில தலைநகர் பாட்னா உள்பட வடக்கு மற்றும் வடகிழக்கு பிகாரின் பகுதிகளை ககாரியா உடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முன்னதாக, பகல்பூரில் சுமார் ஆயிரத்து 717 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு இருந்த அகுவானி பாலம் இடிந்து விழுந்தது. மேலும், கடந்த ஓராண்டில் மட்டும் பிகாரின் பல பகுதிகளில் உள்ள பாலங்கள் இடிந்து விழுந்து உள்ளது. இதன்படி,

  1. ஏப்ரல் 30, 2022 - பகல்பூர் - கார்கியா இடையில் அக்வானி கங்கா அருகே கட்டப்பட்டு வந்த மகாசேது பாலம் இடிந்தது
  2. மே 20, 2022 - பாட்னாவின் ஃபடுவாவில் பெய்த கனமழை காரணமாக 136 வருடம் பழமையான பாலம் இடிந்து விழுந்தது
  3. ஜூன் 9, 2022 - சஹார்ஷா மாவட்டத்தின் சிமிரி பாக்தியார்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட கண்டுமெர் கிராமத்தில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது
  4. நவம்பர் 18, 2022 - நாளந்தாவின் வேனா தாலுகாவில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது
  5. ஜனவரி 16, 2023 - தார்பங்காவில் உள்ள கம்லா நதியின் மேல் இருந்த இரும்பு பாலம், அதிக பளு ஏற்று வந்த லாரியால் இடிந்தது
  6. பிப்ரவரி 19, 2023 - பாட்னா மாவட்டத்தின் பிதா - சர்மேரா நான்காவது லேனில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்தது
  7. மார்ச் 19, 2023 - சரன் மாவட்டத்தில் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பாலம், அதிக சுமை ஏற்றி வந்த வாகனத்தால் இடிந்தது
  8. மே 16, 2023 - பூர்னியா மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த பாலம், கான்கிரீட் போடப்பட்ட அடுத்த 4 மணி நேரத்தில் இடிந்து விழுந்தது
  9. ஜூன் 4, 2023 - ககாரியா மாவட்டத்தின் அகுவானி கங்கா பாதையில் கட்டப்பட்டு வந்த மகாசேது பாலம் இடிந்தது
  10. ஜூன் 24, 2023 - கிஷாங்காஜில் உள்ள மெஞ்சி நதியில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் நடுவில் இருந்த தூண் இடிந்து ஆற்றில் மூழ்கியது
  11. இருப்பினும், இதுவரை பாலம் இடிந்து விழும் விபத்துகள் தொடர்பாக மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: Chamoli accident: கங்கை திட்ட பணியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 16 பேர் பலி - வீடியோ வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.