ETV Bharat / bharat

'மாப்ள ஃபோட்டல பார்த்த மாதிரி இல்ல' - ஓட்டம்  எடுத்த மணமகள்! - மேற்கு சம்பரன்

பாட்னா: "மாப்ள ஃபோட்டல பார்த்த மாதிரி இல்லை" எனக் கூறி, மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bride
மணமகள்
author img

By

Published : Mar 5, 2021, 4:34 PM IST

பிகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் சனகஹியா மாய் என்ற கோயிலில் விநோத காரணத்தை சுட்டிக்காட்டி திருமணம் நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமண ஆசையுடன் மணவறையில் அமர்ந்திருந்த பெண், மாப்பிள்ளையைப் பார்த்ததும் காதலில் விழுவார் என்று எதிர்பார்த்தால், அவரோ தரையில் விழுந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். "இவருக்கு நான் ஓகே சொல்லவில்லை. ஃபோட்டாவில் பார்க்கும் போது, வேற மாதிரி இருந்தார்" என்று குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். இதனால் திருமணத்திற்காக வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். மணமகளின் பெற்றோர்கள் அவரை சமாதானம் செய்ய முயன்றனர்.

திருமணத்திலிருந்து மணமகள் ஓட்டம்

இருப்பினும், பிடிவாதத்தை விட்டுக்கொடுக்காமல் மணவறையிலிருந்து அப்பெண் வெளியேறினார். இதனால், இருவீட்டார் இடையே நடந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியது. இதையடுத்து, ஊர் மக்கள் தலையீட்டுச் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததால், வேறு வழியின்றி மணமகனும் அங்கிருந்து புறப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருமணத்தில் விருப்பமில்லாத இளம்பெண் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.