ETV Bharat / bharat

மூளைச்சாவடைந்த மணப்பெண் - உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்! - karnataka Bride fell unconscious on stage

கர்நாடகாவில் திருமண வரவேற்பின்போது மணப்பெண் மயங்கிவிழுந்து மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது பெற்றோர் மகளின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளனர்.

author img

By

Published : Feb 13, 2022, 2:50 PM IST

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் ஸ்ரீனிவாஸ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சைத்ரா (26). இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணப்பெண் சைத்ரா மணமேடையில் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக சைத்ராவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில், பிப்ரவரி 11ஆம் தேதி சைத்ரா மூளைச்சாவு (Brain Dead) அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஐந்து நாள்களாகத் தொடர் சிகிச்சையில் இருந்த சைத்ரா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எம்எஸ்சி உயிர் வேதியியல் பட்டதாரியான சைத்ரா, சிக்பல்லாபூர் மாவட்டம் கைவாராவில் உள்ள பைரவேஸ்வரா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிவந்தார். அவரது திருமணம் பிப்ரவரி 7ஆம் தேதி ஹோஸ்கோட்டைச் சேர்ந்த இளைஞருடன் நிச்சயிக்கப்பட்டது.

திருமண வரவேற்பு
திருமண வரவேற்பு

பிப்ரவரி 6ஆம் தேதி அன்று இரவு இந்தச் சம்பவம் நடந்தபோது மணமகள் சைத்ரா மணமகனுடன் மகிழ்ச்சியாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில், சைத்ரா மூளைச்சாவு அடைந்த சம்பவம் இரு குடும்பங்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து சைத்ராவின் பெற்றோர்களான ராமப்பா, அக்கேம்மா அவரது உறுப்புகளைத் தானம் செய்ய முடிவுசெய்தனர். பெற்றோரின் இந்த முடிவை கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் பாராட்டினார்.

இது குறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “26 வயதிலேயே சைத்ரா உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. கோலார் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீனிவாசபுரத்தில் நடந்த திருமண வரவேற்பின்போது அவர் மயங்கிவிழுந்த நிலையில் நிம்ஹான்ஸ் மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்ததாகத் தெரிவித்தனர்.

இது அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும், அவர்கள் சைத்ராவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய எடுத்துள்ள முடிவு மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும், ஆதரவற்றோருக்கு உதவியதாகவும் உள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆந்திராவில் ரூ.850 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு அழிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.