புதுச்சேரி: புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் மாநில போக்குவரத்து காவல் பிரிவு தலைமைக் காவலர் ஒருவர் இருசக்கர வாகனம் ஒன்றை மடக்கிப்பிடித்து மாமூல் கேட்டுள்ளார்.
அப்போது அந்த ஓட்டுநர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்தபடி அவரிடம், ’மாநில அரசு உமக்கு மாதம் 90,000 ரூபாய் ஊதியம் கொடுக்கிறது. இது போதாது என்று மாமூல் கேட்பது தவறு. மேலும் வாரவாரம் நீங்கள், மற்றொரு காவலர் என இருவருமே வரும் வாகனங்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டல் விடுத்து வருகிறீர்கள்.
எனவே, உங்கள் மீது டிஜிபி-யிடம் புகார் கொடுப்பேன்’ எனக் கூறி காவலரை எச்சரித்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இனணயத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!