ETV Bharat / bharat

மூளைச்சாவு அடைந்த ஸ்பானிஷ் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்; 5 பேருக்கு மறுவாழ்வு - மும்பை

மூளைச்சாவு அடைந்த ஸ்பானிஷ் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், மும்பையில் உள்ள 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

உடல் உறுப்புகள் தானம்
உடல் உறுப்புகள் தானம்
author img

By

Published : Jan 14, 2023, 10:37 AM IST

மும்பை: ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தெரசா பெர்னாண்டஸ், உலக சுற்றுலா பயணமாக பல நாடுகளுக்கு சென்று வந்தார். அந்த வகையில் ஜனவரி 5ஆம் தேதி இந்தியாவை சுற்றி பார்ப்பதற்காக மும்பை வந்தார். அங்கு எலிபெண்டா குகைகளை சுற்றி பார்த்த அவர், ஜனவரி 7ஆம் தேதி தென் மும்பை பகுதியில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். தெரசாவை உடனடியாக மீட்ட சக பயணிகள், அவரை ஜாஸ்லோக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தெரசாவின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதை கண்டறிந்தனர். தெரசா பெர்னாண்டசின் மூளையின் முக்கிய பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதால், மூளையின் அழுத்தத்தை குறைக்க மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால், அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவர் மூளை சாவு அடைந்தார்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தெரசாவின் குடும்பத்தினர், அவரது உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து தெரசா பெர்னாண்டசின் இதயம், நுரையீரல், கல்லீரல், 2 சிறுநீரகங்களை மருத்துவர்கள் அகற்றினர். இதில், இவரது இதயம் சென்னையில் உள்ள நோயாளிக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. மற்ற உடல் உறுப்புகள் மும்பையை சேர்ந்தவர்களுக்கு பொருத்தப்பட்டன. இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்த வெளிநாட்டு பெண்ணின் உடல் உறுப்பு தானம் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

இதையும் படிங்க: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டிஸ்சார்ஜ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.