சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக தலைமையிலான அரசின் விலைவாசி உயர்வு, புதிய மக்கள்தொகை கொள்கை ஆகியவை குறித்து கடுமையாக சாடியுள்ளார்.
பூபேஷ் பகேல் கூறியதாவது, "உலகில் அதிக இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா என ஏழு ஆண்டுகளுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி பேசிவந்தார். ஆனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்காமல் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று வருகிறார்.
புதிதாக பொறுபேற்றுள்ள விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா ஏர் இந்தியாவை விற்க முழு முயற்சி செய்ய தொடங்கியுள்ளார். இரண்டு மாகாராஜாக்களும் விற்பனைக்காகவே உள்ளனர்" என கடுமையாக சாடியுள்ளார்.
கடந்தாண்டு, காங்கிரசிலிருந்து பாஜகவில் இணைந்த ஜோதிராத்திய சிந்தியாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தந்த பாஜக, தற்போது மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் விமானப் போக்குவரத்துறை இலக்காவை தந்துள்ளது. இந்தாண்டுக்குள் பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க அரசு தீவிரம் காட்டிவருகிறது.
இதையும் படிங்க: "நான் குடியரசுத் தலைவரா" - சரத்பவார் பதில்