ETV Bharat / bharat

ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது குண்டுவீச்சு - Kannur district Kerala

கேரளா கண்ணூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் இன்று (ஜூலை 12) அதிகாலை குண்டுவீசப்பட்டுள்ள நிலையில், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் மீதி குண்டு வீச்சு
ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் மீதி குண்டு வீச்சு
author img

By

Published : Jul 12, 2022, 10:31 AM IST

திருவனந்தபுரம்: கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையனூர் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் இன்று (ஜூலை 12) அதிகாலை குண்டு வீசப்பட்டது. இந்த குண்டு வீச்சில் அலுவலகத்தின் உள்ளே இருந்த ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்டவை சேதமடைந்தன. இதுகுறித்து, கண்ணூர் காவல் துறையினர் ஊடகங்களுக்கு தகவல் அளித்தனர்.

திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) அலுவலகத்தில் சில நாள்களுக்கு முன்னர் குண்டு வீசப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, தற்போது ஆர்எஸ்எஸ் அலுவலகத்திலும் குண்டு வீசப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வீச்சால் அலுவலகத்திற்குள் சில பொருட்கள் சேதமடைந்ததாகவும், இந்த தாக்குதலில் யாருக்கும் பாதிப்பில்லை எனவும் காவல் துறை தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் மீதி குண்டு வீச்சு

இந்த தாக்குதலின் பின்னணியில் சிபிஎம் இருப்பதாக ஆர்எஸ்எஸ் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை தொடர்ந்து, பாஜக - ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் கொல்லப்பட்ட பையனூர் ராமந்தளியைச் சேர்ந்த சிபிஎம் - டிஒய்எஃப்ஐ தொழிலாளரான தன்ராஜின் நினைவு தினம் நேற்று (ஜூலை 11) அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • Kerala | Bomb hurled at RSS office in Payyannur, Kannur district. The incident happened early this morning with window glasses of the building broken in the attack, as per Payyannur police

    — ANI (@ANI) July 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: கேரளா சிபிஐ(எம்) மாநில தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வீச்சு - சிசிடிவி காட்சி...

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.