மணிப்பூர் (இம்பால்): மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரான இம்பால்லில் நேற்று மாலை தெல்லிபடியில் துர்கா கோயில் அருகே திடீர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் சுபர் பிரசாத் எனும் 30 வயது இளைஞனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு அருகிலிருந்த ஜவர்ஹலால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நிகழ்வை அறிந்த மணிப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்தினர். மேலும் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் சோதனை நடத்தினர். மணிப்பூர் காவல் ஆணையருடன் ஐஜிபி தெம்திங் மஷங்வா தலைமையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயமடைந்த பிரசாத் அபாய கட்டத்தை கடந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சர்தாம் யாத்திரை - பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு!