பெகுசாராய்(பிகார்): பிகார் மாநிலத்தில் உள்ள பெகுசாராய் பகுதியில் நேற்று (ஜூலை 28) சாலையோரத்தில் அடையாளம் தெரியாத இறந்த உடல் ஒன்று கிடந்துள்ளது. அந்த உடல் பாதி அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசி நிலையில் காணப்பட்டது.
இந்த உடலை சில மணி நேரங்களில் இருவர் கயிறு கட்டி சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர். இதன் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலானது. இதனையடுத்து இது மனித தன்மையற்ற செயல் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இறந்த சடலம் குறித்து லக்கோ பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த உடலை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். இருப்பினும் அந்த உடலை யாரும் கையால் தொடாமல் கயிறால் கட்டி இழுத்து ஒரு ட்ராக்டரில் போட்டு பின் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
![சாலையோரம் கிடந்த உடல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/bh-beg-04-police-viz-byte-10004-sd_28072022142241_2807f_1658998361_623.jpg)
அடையாளம் தெரியாத உடல்களை அப்புறப்படுத்த எந்த ஒரு முறையான வழிகளை பின்பற்றாததால் அந்த காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் அனில் குமார் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
![சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/bh-beg-04-police-viz-byte-10004-sd_28072022142241_2807f_1658998361_809.jpg)
இதையும் படிங்க:ஆம்புலன்ஸ் இல்லாததால் 8வயது சிறுவன் மடியில் 2வயது தம்பியின் சடலம்- மத்திய பிரதேசத்தில் சோக சம்பவம்