ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மலைப்பகுதியில் நேற்று முன் தினம் (செப்-4) இரண்டு பெண்ணின் இறந்த உடல்கள் மீட்கப்படன. இறந்தவர்கள் மாந்தீரிகம் போன்ற சடங்குகளுக்காக கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் காணாமால் போன மற்றொரு பெண்ணை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ராஞ்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நவுஷத் ஆலம் கூறுகையில், ‘ இறந்தவர்களின் உடல்கள் அங்குள்ள மலைப்பகுதியில் இருந்து 60 கி.மீ தொலைவில் இருந்து வீசப்பட்டுள்ளது.
மேலும் உடல்கள் முழுவதும் குச்சிகளால் தாக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று முன்தினம் கிடைத்த தகவலையடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது’ எனக் கூறினார். மேலும் கொல்லப்பட்ட பெண்கள் அப்பகுதியைச் சேர்ந்த ரயிலு தேவி (45) மற்றும் தோலி தேவி(60) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் தற்கொலை செய்த மகன்... பிரிவைத் தாங்காத தாயும் தற்கொலை செய்த சோகம்