புதுச்சேரியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஊசுட்டேரி. இந்த ஏரி அப்பகுதி நீர் ஆதாரமாகவும் சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு வெளிநாட்டு பறவைகள் சீசன் நேரங்களில் வருவதுண்டு.
மேலும் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல புதுச்சேரி சுற்றுலாத் துறை சார்பில் படகு குழாம் இயங்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையின் காரணமாக படகு குழாம் மூடப்பட்டது. இந்நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட படகுகளை கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையில் காரணத்தால் நீரின் மட்டம் அதிகரித்தது.
இந்த ஊசுட்டேரி நீர்மட்டம் உயர்வு காரணமாக அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை சுற்றுலா துறை ஊழியர்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் பணக்காரப் பெண்ணாக உருவெடுத்துள்ள ரோஷினி