பாட்னா: பிகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள தானாபூரில் 55 பேருடன் கங்கை ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 10 பேர் மாயமாகினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், தீயணைப்புதுறை உடன் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில், "படகில் இருந்த அனைவரும் பாட்னாவின் தவுத்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்று மாலை பணிக்கு சென்றுவிட்டு திரும்புகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 45 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 10 பேர் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. நேற்று மாலை முதல் தேடுதல் பணி தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பதற வைக்கும் வீடியோ: பஞ்சாபில் சரிந்த ராட்சத ராட்டினம்