ETV Bharat / bharat

34 பயணிகளுடன் கங்கையில் கவிழ்ந்த படகு - உயிர் சேதம் தவிர்ப்பு.... - Andra devotees boat capsize in ganga

ஆந்திராவில் இருந்து வாரணாசிக்கு ஆன்மீக சுற்றுலா சென்றவர்கள் பயணம் செய்த படகு கங்கை நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் பயணித்த 34 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

படகு கவிழ்ந்து விபத்து
படகு கவிழ்ந்து விபத்து
author img

By

Published : Nov 26, 2022, 9:47 AM IST

Updated : Nov 26, 2022, 10:42 AM IST

வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் இருந்து திரளான மக்கள் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். 34 ஆந்திர பயணிகளுடன் கங்கை நதியில் சென்ற படகு திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கங்கை நதியில் தத்தளித்த சுற்றுலா பயணிகள் அனைவரையும், துரிதமாக செயல்பட்டு படகோட்டி கரைக்கு கொண்டு சேர்த்தார். இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

படகில் பயணம் செய்த 32 பேர் நலமுடன் இருப்பதாகவும் இருவர் மட்டும் சற்று மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ரவுடிகளுக்கு ஆப்பு: "டிராக் கேடி" செயலி தமிழ்நாடு காவல்துறை அறிமுகம்...!

Last Updated : Nov 26, 2022, 10:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.