ETV Bharat / bharat

நரேந்திர மோடி- ஆன்டணி பிளிங்கன் பேசியது என்ன? - Blinken

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் புதன்கிழமை (ஜூலை 28) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது, இந்தியா- அமெரிக்கா உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

US-India global partnership
US-India global partnership
author img

By

Published : Jul 29, 2021, 12:38 PM IST

டெல்லி : அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் புதன்கிழமை (ஜூலை 28) பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின்போது, கோவிட் -19 பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகள், காலநிலை மாற்றம், பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஜனநாயகக் கொள்கைகள் குறித்த பிராந்திய சவால்கள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், “அமெரிக்க-இந்தியா உறவுகளை ஆழப்படுத்தும் முயற்சிகள் குறித்து பிளிங்கன் மற்றும் மோடி விவாதித்தனர்” என்றார்.

மேலும் அவர், “ஆன்டணி ஜே பிளிங்கன்- பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின்போது, அவர்கள் அமெரிக்க-இந்தியா உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகள் குறித்து விவாதித்தனர். கோவிட் கட்டுப்பாடு, காலநிலை மாற்றம் மற்றும் ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு, அமெரிக்க- ஆஸ்திரேலியா- இந்தியா- ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய குவாட் கூட்டணி, பிராந்திய சவால்கள் மற்றும் வளர்ந்து வரும் ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தனர்” என்றார்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானின் நிலைமை, இந்தோ-பசிபிக் ஈடுபாடுகள் மற்றும் கோவிட் (COVID-19) பரவல் ஆகியவை குறித்து வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் பிளிங்கன் பரந்த அளவில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த உறவை "அடுத்த கட்டத்திற்கு" கொண்டு செல்வதை மையமாகக் கொண்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடன் பிளிங்கன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் பிளிங்கனின் இந்தியாவுக்குச் வந்த முதல் பயணம் இதுவாகும். அமெரிக்க அதிபராக பிடன் ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்தபின் உயர்மட்ட அளவிலான அமெரிக்க பிரதிநிதியின் மூன்றாவது பயணம் இதுவாகும்.

முன்னதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மார்ச் மாதம் இந்தியாவுக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து, காலநிலை மாற்றம் குறித்த அமெரிக்க சிறப்பு தூதர் ஜான் கெர்ரி ஏப்ரல் மாதம் டெல்லிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.