ஸ்ரீநகர்: ஜம்மு விமான நிலையத்தின் உயர் பாதுகாப்பு தொழில்நுட்பப் பகுதியில் இன்று அதிகாலை ஐந்து நிமிட இடைவெளியில் இரண்டு முறை குண்டு வெடித்த சத்தம் கேட்டுள்ளது.
உடனடியாக தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த தாக்குதல் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய விமானப் படை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் இரண்டு நபர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. எந்த விமானத்திற்கும் சேதம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. முதல் குண்டுவெடிப்பு அதிகாலை 1:40 மணிக்கு ஒரு கட்டடத்தின் மேற்கூரை பகுதியிலும் இரண்டாவது குண்டுவெடிப்பு திறந்த வெளியிலும் ஏற்பட்டுள்ளது.
தற்போது விமான நிலையத்தைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க உயர்மட்ட அலுவலர்கள் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி