ஜலந்தர்(பஞ்சாப்): பில்லூரில் உள்ள மன்சூர்பூர் கிராமத்தில் நேற்று (டிச.5) காலை குருத்வாரா சாஹிப்பை சேதப்படுத்தியவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக இளைஞர் ஒருவர் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான குருதவாரவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து வழிபாட்டு பொருட்களை சேதபடுத்தியும், புகையிலையை துப்பியும் சீக்கிய மதத்தின் மீது நிந்தனை(மத உணர்வுகளை அவமானப்படுத்துவது) செய்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க:கூலிப்படையை ஏவி மகனைக் கொலை செய்த தொழிலதிபர்