ETV Bharat / bharat

ஜடேஜாவின் மனைவி ரிவாபா 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி - ஜடேஜாவின் மனைவி ரிவாபா

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஜடேஜாவின் மனைவி ரிவாபா 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

author img

By

Published : Dec 8, 2022, 2:11 PM IST

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பாஜக 152 தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது. வடக்கு ஜாம்நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

மொத்தமாக 72,083 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப்போட்டியிட்ட ஆம் ஆத்மியின் கர்ஷன்பாய் கர்மூர் 29,678 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் பிபேந்திரசிங் 19,678 வாக்குகளையும் பெற்றனர். மொத்தமாக 56.75 விழுக்காடு வாக்குகளை ரிவாபா பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதேபோல, முதலமைச்சர் பூபேந்திர படேல் கட்லோடியா தொகுதியில் 1,07,960 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வீடியோ: குஜராத்தில் கொண்டாட்டத்தை தொடங்கிய காவிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.