டெல்லி: தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன்படி வேட்பு மனுத்தாக்கல் நடந்து முடிந்த நிலையில், தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர். மீதமுள்ள மாநிலங்களில் மட்டும் நேற்று (ஜூன் 10) தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில், மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கும், கர்நாடகா, ராஜஸ்தானில் தலா 4 இடங்களுக்கும், ஹரியானாவில் 2 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.
இதில் பாஜக 8 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், மகா விகாஸ் அகாடி, தேசியவாத காங்கிரஸ் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன. அதோடு ஹரியானாவில் பாஜக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் வென்றார். தமிழ்நாட்டில் திமுக தஞ்சை சு.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன், காங்கிரஸ் ப.சிதம்பரம், அதிமுக சிவி சண்முகம், தர்மர் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாநிலங்களவை தேர்தல் விறுவிறுப்பு... கர்நாடகாவில் திருப்பம்...