உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள சரோஜினி நகர் பகுதியில் வரவிருக்கும், அரசு தடய அறிவியல் மையத்தின் பூமி பூஜை விழாவில், உள் துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, " யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேசத்தில் 44 நலத்திட்டங்களை செயல்படுத்தி நாட்டின் நம்பர் 1 மாநிலமாக மாற்றியுள்ளார்.
ஊழல் நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணிக்கிறார். கரோனா காலத்தில், யோகி அரசு சிறப்பாக செயல்பட்டது. தேர்தல் வருவதையொட்டி தான், எதிர்க்கட்சியினர் வெளியே வர தொடங்கியுள்ளனர். ஆனால், அவர்கள் உங்களை தவறாக வழிநடத்திடக்கூடாது.
நில மாஃபியாக்கள் இருந்த போதும், கலவரங்கள் நடந்த போதும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த போதும், குடும்பங்களுக்கு கழிப்பறைகள் இல்லாதபோதும் அவர்கள் எங்கே இருந்தார்கள்?
பாஜக எந்த ஒரு குறிப்பிட்ட சாதியோ அல்லது குடும்பத்திற்கோ வேலை செய்யவில்லை, ஏழைகளுக்காக தான் வேலை செய்கிறது.இங்கு வரவிருக்கும் நிறுவனம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது மட்டுமின்றி சட்ட ஒழுங்கை மேம்படுத்திட முடியும். இங்கு டிஎன்ஏ சென்ட்ரை அமைத்திட, 15 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும்"என அமித் ஷா தெரிவித்தார்.
இதையும் படிங்க: மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் ‘மும்பை பிளஸ்’ திட்டம்