ETV Bharat / bharat

கலிபோர்னியாவில் ராகுலுக்கு எதிராக பாஜகவினர் கோஷம்.. கூலாக டீல் செய்த ராகுல்!

author img

By

Published : May 31, 2023, 10:30 AM IST

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றிக் கொண்டிருந்த போது, பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்கள் "ஜோடோ" என்று கோஷமிட, அவர்களுடன் சேர்ந்து, ராகுலும் பாரத் ஜோடோ என்று கத்தினார். பின் அவர்களையும், இந்த நிகழ்விற்கு வரவேற்பதாக ராகுல் கூலாக கூறிவிட்டு தனது பேச்சைத் தொடர்ந்தார்.

BJP supporters disrupt Rahuls address to NRI community at California University
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேச்சை இடைமறித்த பா.ஜ., ஆதரவாளர்கள் - கூல் ஆக டீல் செய்த ராகுல்!

ஹைதராபாத்: அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான்டா குரூஸ் பகுதியில், புலம்பெயர் இந்தியர்களிடையே, ராகுல் காந்தி உரையாற்றிய போது, பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்கள், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அவர்களை கூலாக டீல் செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அவர்கள் அங்கிருந்து அகற்றப்படுவதற்கு முன்பு, அவர்களை இன்முகத்துடன் வரவேற்கவும் செய்தார்.

அவர்கள் ஜோடோ ஜோடோ என்று கோஷமிட்ட போது, ராகுலும், அவர்களுடன் இணைந்து, பாரத் ஜோடோ என்று உரக்க சொன்னார். காங்கிரஸ் கட்சி, அனைவரையும் அனுசரித்து செல்லும் கட்சி என்றும், எதிர்கருத்து உள்ளவர்களைக் கூட, அன்பு மற்றும் பாசத்தை காட்டி வரவேற்கும் கட்சி என்று, தான் சமீபத்தில் மேற்கொண்டிருந்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய அவரது சமீபத்திய பாத யாத்திரையே இதற்கு உதாரணம் என்று ராகுல் குறிப்பிட்டு உள்ளார்.

  • VIDEO | "The government tried everything it could do to stop the (Bharat Jodo) Yatra, but its impact kept on increasing," says Congress leader Rahul Gandhi in his address at University of California, Santa Cruz.

    (Source: Indian National Congress) pic.twitter.com/froRoPbs2q

    — Press Trust of India (@PTI_News) May 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தியாவில், பாரதிய ஜனதா கட்சி, மக்களை, அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்தி அச்சுறுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியினர் அனைவரிடத்திலும் அன்பாகவும், பாசமாகவும் இருப்பவர்கள். யாராவது, எதை சொன்னாலும், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை, காது கொடுத்து கேட்போம். நாங்கள் யார் மீதும் கோபப்பட மாட்டோம். அதுதான் எங்களது இயல்பு என்று ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: இங்கிலாந்து பிரதமரும் இந்தியர்... பர்மிங்காம் மேயரும் இந்தியர்... இது எப்படி இருக்கு!

முன்னதாக ராகுல் காந்தி, அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் இந்தியர்கள் மற்றும் அமெரிக்க பிரமுகர்களை சந்திக்க சான் பிரான்சிஸ்கோ நகரத்திற்கு வந்தடைந்தார். ராகுல் காந்தியை, விமான நிலையத்தில், இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் சாம் பிட்ரோடா மற்றும் அதன் உறுப்பினர்கள் வரவேற்றனர்.

ராகுல் காந்தியிடம், எம்.பி.க்களுக்கு உரிய சிறப்பு பாஸ்போர்ட் இல்லாமல், சாதாரண பாஸ்போர்ட் மட்டுமே இருந்ததால், இமிகிரேசன் பணிகளுக்காக, அவர் அந்த கவுண்டரில், 2 மணிநேரத்திற்கும் மேலாக, வரிசையில் நின்றதாக, காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராகுல் உடன், வரிசையில் நின்ற பலரும், அவருடன், செஃல்பி எடுத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்போது, நீங்கள் ஏன் இந்த வரிசையில் நிற்கிறீர்கள் என்று, பலர் கேட்டதற்கு, பதில் அளித்த ராகுல் காந்தி, நான் தற்போது எம்.பி., இல்லை என்றும், தங்களைப் போன்று நானும் சாதாரண மனிதன் தான் என்று தெரிவித்து இந்த நிலையையே இருக்க தான் விரும்புவதாக குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: டெல்லியில் மல்யுத்த வீரர்களுக்கு நடந்தது கண்டிக்கத்தக்கது - ப.சிதம்பரம் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.