ETV Bharat / bharat

குஜராத்தில் பாஜக சாதனை... இமாச்சலில் காங்கிரஸ் பெரும்பான்மை... கோட்டைவிட்ட ஆம் ஆத்மி... - Congress headed for majority in Himachal

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வரலாற்று சாதனை படைத்துள்ளது. இமாச்சலில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

குஜராத்தில் பாஜக சாதனை
குஜராத்தில் பாஜக சாதனை
author img

By

Published : Dec 8, 2022, 5:11 PM IST

ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக வரலாற்று சாதனை படைக்க உள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் அதிக தொகுதிகளை பெற்ற கட்சி என்ற பெயரை பாஜகவுக்கு கிடைக்க உள்ளது. இன்று (டிசம்பர் 8) மாலை 4 மணி நிலவரப்பட்டி 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில், பாஜக 79 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டது. அதோடு, 79 இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.

இந்த முடிவுகளின்படி பாஜக கிட்டத்தட்ட 158 தொகுதிகளை கைப்பற்ற வாயப்புள்ளது. இதனிடையே காங்கிரஸ் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 9 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்திக்க உள்ளது. குஜராத்தில் தொடர்ந்து ஏழாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. 1985ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 149 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த சாதனையை பாஜக 2022ஆம் ஆண்டில் முறியடிக்க உள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 26 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆனால், பாஜக 14 இடங்களில் வெற்றிபெற்று, 12 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆம் ஆத்மி 2 மாநிலங்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதையும் படிங்க: வெற்றி பெற்றவர்களை பாதுகாக்கும் காங்கிரஸ் - இமாச்சலில் நடப்பது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.