ETV Bharat / bharat

'பாஜக ஆட்சி நாட்டின் சூழலுக்கு உகந்தது அல்ல' - குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி! - Barpeta court

பாஜக ஆட்சி நாட்டின் சூழலுக்கு உகந்ததாக இல்லை. நாட்டின் சாமானியர்கள் அனைவராளும் இதனை உணர்ந்து கொள்ள முடிகிறது காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.

bjp-rule-is-not-conducive-to-the-environment-of-the-country-dot-dot-dot-gujarat-mla-jignesh-mevani
பாஜக ஆட்சி நாட்டின் சூழலுக்கு உகந்தது அல்ல... குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி
author img

By

Published : Jul 16, 2023, 11:01 PM IST

கவுகாத்தி (அஸ்ஸாம்): குஜராத்தில் இளம் அரசியல் தலைவராகவும், தலித் போராளியாக, இடதுசாரி அரசியல்வாதியாக உருவெடுத்தவர் ஜிக்னேஷ் மேவானி. குஜராத்தில் பசுவதை என்ற பெயரில் பொதுமக்கள் தாக்கப்படுவதற்கும், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளையும் எதிர்த்து தீவிரமாக போராடி குஜராத் மக்களின் மனதில் இடம் பிடித்து சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி வகித்து வருபவர்.

பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கடந்தாண்டு ஏப்ரல் 19ஆம் தேதியன்று அஸ்ஸாமின் கோக்ரஜாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி ஏப்ரல் 20 (2022) இரவு அஸ்ஸாம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு மறுநாள் காலை விமானம் மூலம் கவுகாத்திக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து இருந்து கோக்ரஜாருக்கு ரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

வெளி மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதியை கைது செய்து, அடுத்த நாளே அஸ்ஸாமுக்கு அழைத்துச் சென்றதற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவ்வழக்கில் ஆஜராவதற்கு ஜிக்னேஷ் மேவானி இன்று கவுகாத்தி வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து வந்துள்ளேன். எனக்கு யாருடனும் பகை இல்லை அஸ்ஸாம் முதலமைச்சருடன் எனக்கு விரோதமும் இல்லை. இங்கு வந்ததில் ஒரு நல்ல விசயம் என்னவெண்றல் அஸ்ஸாம் மக்களை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தல் காங்கிரசுக்கு சாதகமாக அமையும்” என்றார்.

வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு என எல்லா வரம்புகளையும் தாண்டிவிட்டது. புதிய தலைமுறையினரின் நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி உடைத்துள்ளார். பாஜக ஆட்சி நாட்டின் சூழலுக்கு உகந்ததாக இல்லை. நாட்டின் சாமானியர்கள் அனைவராளும் இதனை உணர்ந்து கொள்ள முடிகிறது.

நாடு முழுவதும் மக்களை ஒன்றிணைக்கும் வகையில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா கர்நாடக தேர்தலில் எதிரொலிப்பதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என அனைவரையும் காங்கிரஸ் ஒன்று சேர்த்து முன்னே செல்கிறது. இது தான் நம் நாட்டின் கலாச்சாரம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க : பாஜகவின் அடுத்தக்குறி மே.வங்கம்? 5 மாதங்களில் ஆட்சி கவிழ்ப்பு என சர்ச்சை கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.