ETV Bharat / bharat

தேர்தலுக்குத் தயாராகும் பாஜக: 5 மாநில பொறுப்பாளர்கள் நியமனம்

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜக பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.

பாஜக
பாஜக
author img

By

Published : Sep 8, 2021, 3:34 PM IST

அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கான பணிகளில் பாஜக மும்முரமாகக் களமிறங்கியுள்ளது.

இந்த ஐந்து மாநிலங்களில் பஞ்சாபை தவிர ஏனைய மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. எனவே, அனைத்து மாநிலங்களிலும் அதிகாரத்தைத் தக்கவைக்க பாஜக தீவிர முனைப்பு காட்டிவருகிறது.

இந்த ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நியமித்துள்ளார்.

ஐந்து மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

உத்தரப் பிரதேசம் - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், அர்ஜுன் ராம் மேக்வால், சோபா கரன்தால்ஜே, அன்னபூர்ணா தேவி, மாநிலங்களவை உறுப்பினர்கள் சரோஜ் பாண்டே, விவேக் தாக்கூர், ஹரியானா முன்னாள் அமைச்சர் கேப்டன் அபிமன்யூ ஆகியோர் இணைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் உத்தரப் பிரதேசத்திற்கு என ஆறு பிராந்திய பொறுப்பாளர்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா

பஞ்சாப் - மத்திய நீர்வளத் துறை (ஜல் சக்தி) அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, மீனாக்ஷி லேகி, மக்களவை உறுப்பினர் வினோத் சவ்தா ஆகியோர் இணை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் - மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் மத்திய அமைச்சர் பிரதிமா பொமிக், அஸ்ஸாம் அமைச்சர் அசோக் சிங்கால் ஆகியோர் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவா - மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, தர்சானா ஜர்தோஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் - மத்திய நிலக்கரி, சுரங்கம், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவை உறுப்பினர் லாகெட் சட்டர்ஜி, கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சர்தார் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தேசிய பாதுகாப்பு அகாதமி தேர்வில் பெண்களுக்கு அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.