கலாபுரகி: கர்நாடக மாநிலம், கலாபுரகி மாவட்டத்தில் உள்ள சேடம் நகரைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் முத்யாலா (64) என்பவர், எலக்ட்ரானிக் கடை நடத்தி வந்தார். இவர், கோலி கபாலிகா சமாஜ் என்ற அமைப்பிலும் இருந்தார். மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்த இவர், அண்மையில் பாஜகவில் இணைந்தார்.
இந்த நிலையில், மல்லிகார்ஜுன் முத்யாலா நேற்றிரவு(நவ.14) வழக்கம்போல், தனது கடையில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, கடைக்குள் புகுந்த மர்மநபர்கள் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். பிறப்புறுப்பில் கத்தியால் குத்தியும், கழுத்தில் கயிற்றால் இறுக்கியும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதனிடையே சேடம் பாஜக எம்எல்ஏ சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: மதம்மாறி திருமணம் செய்ய வற்புறுத்தல்: இஸ்லாமிய வழக்கறிஞர் மீது இந்து பெண் புகார்!