ETV Bharat / bharat

Gujarat Election Result: கேபிள் பாலம் விபத்து நடந்த மோர்பி தொகுதியின் நிலவரம்!

கேபிள் பாலத்தில் விபத்து ஏற்பட்டு 140 பேர் உயிரிழந்த மோர்பி தொகுதியிலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

பெரும் விபத்து நடந்த மோர்பி தொகுதியிலும் பாஜக முன்னிலை!

author img

By

Published : Dec 8, 2022, 12:42 PM IST

மோர்பி: கடந்த அக்டோபர் 26-ம் நாள், குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் குழந்தைகள் உள்பட 140 பேர் உயிரிழந்தனர். இதில் ராஜ்கோட் பாராளுமன்ற உறுப்பினர் மோகன் குந்தாரியாவின் உறவினர்கள் 12 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து, குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர். ஆனால் தற்போதைய நிலவரப்படி, பாஜக 132 இடங்களில் முன்னிலையிலும் 22 இடங்களில் வெற்றியும் அடைந்துள்ளது. மேலும் காங்கிரஸ் 19 இடங்களிலும், ஆம் ஆத்மி 5 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

முக்கியமாக இந்த பெரும் விபத்து நிகழ்ந்த மோர்பியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் காந்திலால் அம்ருதியா 10,156 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அதேநேரம் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயந்திலால் படேல் 8,780 வாக்குகளுடனும், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பங்கஜ் காந்திலால் ரசாரியா 2,577 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இதில் பாஜக வேட்பாளர் காந்திலால் அம்ருதியா 1995, 1998, 2002, 2007 மற்றும் 2012 ஆகிய ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார். மேலும் 1995ஆம் ஆண்டு முதல் குஜராத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக, தற்போது 7வது முறையாக ஆட்சியை பிடிக்க உள்ளது.

அதேநேரம் 1985ஆம் ஆண்டில் காங்கிரஸின் மாதவ்சிங் சோலங்கியின் தலைமையில் காங்கிரஸ் 149 இடங்களை பெற்று வெற்றி பெற்றது. இந்த சாதனையை இதுவரை முறியடிக்க முடியவில்லை என்பதே குஜராத் தேர்தலில் அனைவருக்குமான சவாலாக உள்ளது.

இதையும் படிங்க: சாதனை மேல் சாதனை.. முன்னிலையால் குஷியான பாஜகவினர்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.