அகமதாபாத்: குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பணக்கார வேட்பாளரான ஜெய்ந்திபாய் சோம்பாய் பட்டேல், ஏறத்தாழ 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
பாஜக சார்பில் மான்சா தொகுதியில் களமிறங்கிய கோடீஸ்வர வேட்பாளர் ஜெயந்திபாய் பட்டேல், ஒட்டுமொத்தமாக 98 ஆயிரத்து 144 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் வேட்பாளர் மோகன்சிங்ஜி தாகூர் 58 ஆயிரத்து 878 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில், ஜெயந்திபாய் பட்டேல் 661 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளதாக ஜனநாயக உரிமைகள் சங்கம் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அவருக்கு அடுத்தபடியாக காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட, பாஜகவைச் சேர்ந்த பல்வந்த் சிங் ராஜ்புத்தின் சொத்து மதிப்பு 343 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சுவாரஸ்யத் தகவலாக, பாஜக சார்பில் போட்டியிட்ட பணக்கார வேட்பாளர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ஆயிரத்து 235 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Live Update: குஜராத், இமாச்சலப் பிரதேசம் தேர்தல் முடிவுகள்!