புதுச்சேரி மாநிலம், திருக்கனூரை அடுத்த மனவெளி பகுதியில் முன்னாள் அமைச்சரும் பாஜக வேட்பாளருமான நமச்சிவாயம், வீடு வீடாகச் சென்று தாமரை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். பெரும்பாலான வீடுகள் பூட்டிக் கிடந்த நிலையிலும், அவர் உற்சாகத்துடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் அந்தப் பகுதி மக்களில் பெரும்பாலானோர் விவசாய வேலைக்காக விளைநிலங்களுக்குச் சென்றிருந்ததை அறிந்து, விளை நிலங்களுக்கே சென்று மக்களை சந்தித்தார். அங்கு நிலக்கடலை பறித்துக் கொண்டிருந்த விவசாயிகளுக்கு உதவியபடி, தாமரை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: 'இறையுணர்வுக்கு எதிரானது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி' - கே.பாலகிருஷ்ணன்