கேரளாவில் 140 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் எல்.டி.எஃப். 99 இடங்களிலும், யூ.டி.எஃப். 41 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளரான மெட்ரோ மேன் ஸ்ரீதரன், பாலக்காடு தொகுதியில் 3,840 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.