மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஆளும் திருணமூல், பாஜக இடையே தீவிரப் போட்டி நிலவிவரும் நிலையில், தேர்தலுக்கான தீவிரப் பரப்புரையில் இரு கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன.
கிழக்கு மித்னாப்பூர் பகுதியில் உள்ள ஹல்தியாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "பாஜக உலகின் மிகப்பெரிய அடாவடி சக்தியாகச் செயல்பட்டுவருகிறது. பணத்தையும், வன்முறை கும்பலையும் வைத்து தொடர் கலவரத்தை மேற்கொண்டுவருகிறது.
மேற்கு வங்க மக்கள் அமைதியை விரும்பினால் திருணமூல் காங்கிரஸ்தான் அவர்கள் தேர்வுசெய்ய வேண்டும். தேர்தலை ஜனநாயக ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர் வன்முறையைத் தேர்ந்தெடுத்து மக்களை அச்சுறுத்திவருகின்றனர்" எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: வேலையின்மை, விலைவாசியை மட்டுமே மத்திய அரசு உயர்த்தியுள்ளது - ராகுல் விமர்சனம்