டெல்லி: 250 வார்டுகளைக் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் 134 வார்டுகளை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, 15 ஆண்டுகளாக ராஜ்ஜியம் செய்து வந்த பா.ஜ.க.வை வெளியேற்றி நீண்ட நாட்களுக்குப் பின் டெல்லி மாநகராட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
இந்நிலையில், டெல்லி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. முன்னதாக மாநகராட்சியின் தற்காலிக சபாநாயகராக பா.ஜ.க.வின் சத்ய சர்மா நியமிக்கப்பட்ட விவகாரம் மற்றும் நியமன கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டதில் ஆளுநர் சக்சேனா மற்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இடையே மோதல் போக்கு நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலுக்குப் பின் நடைபெற்ற முதல் கூட்டத்தில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான ரகசியத் தேர்தலை நடத்தாமல் நியமன உறுப்பினர்களை பதவிப் பிரமாணம் செய்துகொள்ள தற்காலிக சபாநாயகர் சத்ய சர்மா அழைத்துள்ளார்.
இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து கூட்ட அரங்கில் முற்றுகையிட்ட ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள், கோஷம் எழுப்பினர். தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களை கண்டித்து பா.ஜ.க கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் கைகலப்பில் முடியும் சூழல் நிலவியது. காங்கிரஸ் உறுப்பினர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக வெளிநடப்பு செய்த நிலையில், அவை கூச்சலும், கும்மாளமுமாக காட்சி அளித்தது.
-
#WATCH | Delhi: BJP and AAP councillors clash with each other and raise slogans against each other ahead of Delhi Mayor polls at Civic Centre. pic.twitter.com/ETtvXq1vwM
— ANI (@ANI) January 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Delhi: BJP and AAP councillors clash with each other and raise slogans against each other ahead of Delhi Mayor polls at Civic Centre. pic.twitter.com/ETtvXq1vwM
— ANI (@ANI) January 6, 2023#WATCH | Delhi: BJP and AAP councillors clash with each other and raise slogans against each other ahead of Delhi Mayor polls at Civic Centre. pic.twitter.com/ETtvXq1vwM
— ANI (@ANI) January 6, 2023
இதையடுத்து தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது. 4 நியமன உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டதாகவும், விரைவில் அவையை மீண்டும் கூட்டி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடத்தப்படும் என தற்காலிக சபாநாயகர் சத்ய சர்மா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேசிய ஒதுக்கீட்டில் நிரம்பாத மருத்துவ இடங்களை தமிழ்நாட்டிற்கு வழங்குக: அமைச்சர் மா.சு வலியுறுத்தல்