புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நெல்சன். இவர் அதேபகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 5ஆம் தேதி இரவு வீட்டின் முன்பு தனது புல்லட் பைக்கை நிறுத்தி விட்டு உறங்கச் சென்றுள்ளார்.
மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர்.
இதில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் நள்ளிரவில் புல்லட்டை நோட்டமிட்டதும், அவர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்து புல்லட்டை லாவகமாக திருடிச் சென்றதும் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருட்டை தடுக்க பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா திருட்டு!