பாட்னா: பிகார் மாநிலம் முசாபர்பூரில் 3 வயது அண்ணன் மகனை கொலை செய்து வீட்டில் புதைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போச்சா போலீசார் தரப்பில், முசாபர்பூரின் ரசூல்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வினய் குமார். இவரது தனது மனைவி, 3 வயது மகன் நிதிக் குமார், தங்கை கல்பனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) மூவருடன் ஒரே வீட்டில் வசித்துவந்தார். இந்த நிலையில் நேற்று (நவம்பர் 21) காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார். அப்போது கல்பானா வீட்டிற்கு வெளியே பக்கவாட்டில் குழியை மூடிக்கொண்டிருந்தார். இதைக்கண்ட வினய் குமார் அதுகுறித்து கேட்டபோது எலிகளை பிடிப்பதற்காக குழி தோண்டினேன் என்று கல்பானா தெரிவித்துள்ளார்.
அதன்பின், வினய் குமார் குழந்தையும் மனைவியையும் தேடியுள்ளார். அப்போது அண்ணி குழந்தையுடன் வெளியே சென்றுள்ளதாக கல்பனா தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட வினய் குமார், மனைவிக்கு போன் செய்துள்ளார். அப்போது மனைவி தான் தனியாக சென்றதாகவும், நிதிக் குமார் வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த வினய் குமார், கல்பனா மூடிய குழியை தோண்டி பார்த்துள்ளார். அதில், குழந்தை உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. இதையடுத்து போலீசாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் கல்பானா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் கொலைக்காண காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: பைக் சாகசம் - சாலையில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு