கத்திஹார்(பிகார்): பிகாரில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியின் வகுப்பறை ஒன்றில் ஒரே கரும்பலகையில் இரண்டு ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் ஹிந்தி மற்றும் உருது கற்பிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த வீடியோ பிகாரின் கதிஹார் கிராமத்தில் உள்ள ஆதர்ஷ் நடுநிலைப் பள்ளியில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த வீடியோவில் மூன்று ஆசிரியர்கள் ஒரே வகுப்பறையில் உல்ளனர். இவர்களில் ஒருவர் பலகையின் ஒரு பக்கத்தில் இந்தியில் கற்பிக்கிறார், மற்றவர் மறுபுறம் உருது கற்பிக்கிறார், மூன்றாவது ஆசிரியர் வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களை கண்காணிக்கிறார்.
பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். ஆதர்ஷ் நடுநிலைப் பள்ளியின் உதவி ஆசிரியை குமாரி பிரியங்கா கூறுகையில், “உருது தொடக்கப் பள்ளி 2017 இல் கல்வித் துறையால் எங்கள் பள்ளிக்கு மாற்றப்பட்டது. எங்கள் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லை, அதனால்தான் மாணவர்களுக்கு ஒரே அறையில் கற்பிக்கிறோம்’ என தெரிவித்தார்.
மேலும் மாவட்டக் கல்வி அதிகாரி காமேஷ்வர் குப்தா, ‘இங்கு மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்திருந்தால், உருது தொடக்கப்பள்ளிக்கு ஒரு அறை வழங்கப்படலாம். அதிக மாணவர்கள் காரணமாக வெவ்வேறு வகுப்புகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒரே கரும்பலகையில் கற்பிப்பது நல்லதல்ல” என்று கூறினார்.
உருது தொடக்கப் பள்ளியை இந்த வளாகத்திற்கு மாற்றிய பிறகு ஏற்படக்கூடிய உள்கட்டமைப்பு பிரச்சினைகளை அதிகாரிகள் கவனிக்கத் தவறியதாக அவர் மேலும் தெரிவித்தார். மேலும் உள்கட்டமைப்பு வசதிகள் சீர்குலைந்துள்ளதாக பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:பிறந்தநாள் விழா என்று கூறி 12 வயது சிறுமிக்குத் திருமணம் செய்து வைத்த பெற்றோர்!