பிகார் மாநிலத்தில் அமைந்துள்ள நாளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
அங்கு 12க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வந்த நிலையில், நாளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்யக் கோரி மாவட்ட நிர்வாகத்தை நாடியுள்ளது.
ஆனால் நாளந்தா மருத்துவமனை கண்காணிப்பாளர் பாட்னா மாவட்ட மாஜிஸ்திரேட்டிற்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளார்.
பிகாரில் கரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், முதன்மை மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பி வழியத் தொடங்கிவிட்டன.
இதற்கிடையே, பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மெடிக்கல் சயின்ஸ் இன்ஸ்டியூட்டிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் காலியாகவுள்ள மருத்துவர்கள், பாரா மெடிக்கல் ஊழியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.