பாட்னா: கரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இந்நிலையில், பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மே 15ஆம் தேதிவரை பிகாரில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், தடுப்பூசி மையங்கள், வங்கிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஊரடங்கு காலத்தில் செயல்படும் என பிகார் அரசு அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், நேற்று ஒரே நாளில் 82 பேர் கரோனாவால் உயிரிழந்து 2821ஆக அதிகரித்துள்ளது. மேலும், 11,407 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கை - மு.க.ஸ்டாலின் ஆலோசனை