ETV Bharat / bharat

பணியிடத்தில் ஜீன்ஸ், டீ-சர்ட் அணியத் தடை - யாருக்கு தெரியுமா? - பீகார் பள்ளிக்கல்வித் துறை ஜீன்ஸ் டீ சர்ட்க்கு தடை

அலுவலகம் மற்றும் பள்ளிக்கு ஜீன்ஸ், டீ சர்ட் அணிந்து வரக் கூடாது என ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பீகார் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Bihar
Bihar
author img

By

Published : Jun 29, 2023, 3:33 PM IST

பாட்னா : பீகாரில் ஆசிரியர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு ஜீன்ஸ் மற்றும் டீ சர்ட் உள்ளிட்ட சாதாரண உடைகள் அணிந்து வரக் கூடாது என பீகார் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

பீகாரில் பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களில் ஜீன்ஸ், டீ சர்ட் உள்ளிட்ட சாதாரண உடைகள் அணிந்து வருவது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதன் படி இனி பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களில் அசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பார்மல் உடை அணிந்து பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு சாதாரண அல்லது இன்பார்மல் உடை அணிந்து ஆசிரியர்கள் அல்லது ஊழியர்கள் வருவது பணியாளர் கலாசாரத்திற்கு எதிராக இருப்பதாகவும் அதை கட்டுப்படுத்தவே இந்த திட்டத்தை கையில் எடுத்து உள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

பீகார் பள்ளிக் கல்வித் துறையின் கண்ணியத்தை காக்கும் பொருட்டு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பார்மல் உடையில் வரும்படி கேட்டுக் கொள்ளப்படுவதாக அதிகாரிகள் கூறினர். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சரண் மாவட்ட ஆட்சியர், அனைத்து அதிகாரிகளும் ஜீன்ஸ் டீ சர்ட் போன்ற உடைகளை தவிர்த்து பார்மல் உடையில் வருமாறு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அலுவலகத்திற்கு சாதாரண ஆடைகள் அணிந்து வருவதற்கு தடை செய்யும் பிரச்சினை கடந்த 2019ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பீகார் மாநில தலைமைச் செயலக ஊழியர்களுக்காக எடுக்கப்பட்டது. அப்போது அரசு ஊழியர்களை அலுவலகத்திற்கு பார்மல் உடைகள் அணிந்து வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் பணியிடத்தில் எளிமையான, வசதியான மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு பணியாளர்களிடம் அரசு திட்டவட்டமாக கேட்டுக் கொண்டது. தற்போது, கல்வித்துறை ஊழியர்களுக்கு குறிப்பாக ஜீன்ஸ், டீ சர்ட் உள்ளிட்ட ஆடைகள் அணிந்து வரக் கூடாது என அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த புதிய அறிவிப்புக்கு ஊழியர்கள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சத்தீஸ்கர் துணை முதலமைச்சர் அறிவிப்பு... ஜெட் வேகத்தில் போகும் காங்கிரஸ் கட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.