ETV Bharat / bharat

தண்ணீர் குடித்ததற்காக பள்ளி மாணவி மீது தாக்குதல் - ஆசிரியரின் சாதிய வன்மம்? - தாழ்த்தப்பட்ட சமூக மாணவியை தாக்கிய ஆசிரியர்

ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடத்தில் தண்ணீர் குடித்ததற்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவியை ஆசிரியர் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bihar
bihar
author img

By

Published : May 7, 2022, 9:46 PM IST

பாட்னா: பிகார் மாநிலம் மஹோபா மாவட்டம் சிக்காரா கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்ட குடத்திலிருந்து தண்ணீர் குடித்துள்ளார்.

இதைக் கண்ட அப்பள்ளி ஆசிரியர் கல்யாண் சிங், மாணவியை தாக்கியுள்ளார். அப்போது சாதிய ரீதியாக கடுமையாக திட்டியதோடு, சரமாரியாக தாக்கியதாக மாணவி பெற்றோர் கூறினர். இதையடுத்து அரசு அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைக் கேட்ட அதிகாரிகள், சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க, கல்வித்துறைக்கு அறிவுறுத்துவதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவி உள்பட பள்ளியில் உள்ள அனைத்து மாணாக்கர்களிடமும், ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சாக்குமூட்டையில் கட்டி குப்பையில் வீசப்பட்ட ஆண் குழந்தை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.