பாட்னா: பிகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாலன் குமார் சபி (20). சலவைத் தொழிலாளரான இவர், கடந்த ஏப்ரல் மாதம் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து லாகஹா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் அவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தனக்கு பிணை வழங்கக்கோரி அவர் ஜஞ்சார்புர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி அவினாஷ் குமார், அவருக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் பிணை வழங்கி தீர்ப்பளித்தார்.
அதாவது அந்த தீர்ப்பில், “குமார் தனது கிராமத்தில் உள்ள அனைத்துப் பெண்களின் சேலைகளையும் இலவசமாக, ஆறு மாதங்களுக்கு சலவை செய்ய வேண்டும். பின்னர் அதை அயர்ன் செய்து ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்க வேண்டும். இதனைத் தினமும் கண்காணித்து அதன் ஊர் பஞ்சாயத்துத் தலைவர் நஜிமா நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 2 பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 960 கோடி டெபாசிட்!