ETV Bharat / bharat

மரத்துக்கு ராக்கி கட்டி அசத்திய பிகார் முதலமைச்சர்

author img

By

Published : Aug 22, 2021, 8:24 PM IST

மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை, குறிப்பால் உணர்த்தும் விதமாக பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மரத்துக்கு ராக்கி கட்டியுள்ளார்.

Nitish Kumar
Nitish Kumar

பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ரக்ஷாபந்தன் பண்டிகையை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார். தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விழாவில் மரங்களுக்கு ராக்கி கட்டினார், நிதிஷ் குமார்.

மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இதை மேற்கொண்டுள்ளார்.

மாநில அரசின் நீண்ட காலத் திட்டம்

2012ஆம் ஆண்டு முதலே நிதிஷ் குமார் தலைமையிலான அரசு ரக்ஷாபந்தனை மரம் பாதுகாப்பு தினமாக கொண்டாடிவருகிறது. சகோதர, சகோதரிகள் ஒருவரை ஒருவர் அரவணைத்துப் பாதுகாக்க வேண்டும் என்பதே ரக்ஷாபந்தன் பண்டிகையின் தத்துவம்.

மரத்துக்கு ராக்கி கட்டிய நிதிஷ் குமார்
மரத்துக்கு ராக்கி கட்டிய நிதிஷ் குமார்

இதை உணர்த்தும் விதமாகவே நிதிஷ் குமார் மரங்களுக்கு ராக்கி கட்டினார்.

இந்நிகழ்வுக்குப் பின் பேசிய நிதிஷ் குமார், "மக்களை நாம் பாதுகாப்பது போலவே மரங்களைப் பாதுகாப்பதும் அவசியம். மரங்கள் நட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். பிகார் மாநில அரசு புதிய திட்டத்தின் கீழ் நிறைய மரங்களை நடுவதற்கு தயாராகிவருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து இன்றைய தலைமுறையினருக்கு நல்ல விழிப்புணர்வு உள்ளது'' என்றார்.

இதையும் படிங்க: தங்கை பிரியங்காவுக்கு என் வாழ்வில் சிறப்பிடம் - ராகுல் காந்தி நெகிழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.