பாட்னா: பீகார் மாநிலம், அராரியா மாவட்டத்தில் பத்திரிகையாளர் விமல் குமார் யாதவ் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் துரதிஷ்டவசமானது என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் அராரியா மாவட்டம் ராணிகஞ்ச் பஜார் பகுதியில் அடையாளம் தொியாத நபர் ஒருவர் பத்திரிக்கையாளர் விமல் குமார் யாதவ் என்பவரை அவரது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் விமல் குமார் யாதவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை நடைபெற்ற இடத்திற்கு போப்ப நாய்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பத்திரிக்கையாளர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலை செய்தது யார்? என்பது குறித்து காவல்துறையினர் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பத்திரிக்கையாளர் கொலை சம்பவம் வழக்கு காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் சிங் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், "பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. ஒருவரை எப்படி இப்படி கொல்ல முடியும்? பத்திரிகையாளர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நெல்லையில் தொடரும் பயங்கரம்: பஞ்சாயத்து உறுப்பினர் வெட்டி கொலை!