ETV Bharat / bharat

Bihar: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு.. 9 மணிநேர போராட்டம் வெற்றி!

author img

By

Published : Jul 23, 2023, 6:34 PM IST

பீகாரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் மீட்கப்பட்டு உள்ளார். ஏறத்தாழ 9 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

Bihar
Bihar

நாலந்தா : பீகாரில் 40 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் 9 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

பீகார் மாநிலம் நாலந்தா அடுத்த குல் கிராமத்தை சேர்ந்த, 3 வயது சிறுவன் சிவம் குமார். தன் தாயாருடன் தோட்டத்து வேலைக்கு சென்று இருந்த நிலையில், அருகில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். விவசாயியின் தோட்டத்தின் வெட்டப்பட்டு இருந்த ஆழ்துளைக் கிணற்றில் விளையாடிக் கொண்டு இருந்த சிவம் குமார் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிவம் குமாரின் தாய் கிராம மக்கள் அழைத்து தனது குழந்தையை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்து உள்ளார். சம்பவம் குறித்து அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஆழ்துளை கிணறு இருக்கும் பகுதிக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபடத் துவங்கினர்.

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவனுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரம் கொண்டு தோண்டப்பட்டது. ஆழ்துணை கிணற்றில் பக்கவாட்டு மண் சரிந்து விழாத வண்ணம் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.

ஏறத்தாழ 9 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிவம் குமாரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். ஆழ்துளை கிணற்றில் இருந்து சிவம் குமார் மீட்கப்பட்டதை கண்ட கிராம மக்கள் ஆரவாரம் செய்து கத்தினர். தொடர்ந்து சிறுவன் சிவம் குமார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிவம் குமாரின் உடல் நிலை குறித்த தகவல்கள் வெளியிடப்படாத நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக கடந்த ஜூன் 6ஆம் தேதி இதேபோன்று மத்திய பிரதேச மாநிலம் ஷெஹோரில் உள்ள 300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டரை வயது சிறுமியை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். இருப்பினும் சிகிச்சையின் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : பாஸ்டேக்கில் பிரச்சினை.. டோல்கேட் சூறையாடல்.. மகாராஷ்டிர நவநிர்மன் சேனா தொண்டர்கள் அட்டூழியம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.