பிகார் (கோபால்கஞ்ச்): பிகார் மாநிலம் பெட்டியா- கோபால்கஞ்ச் எல்லையில் அமைந்துள்ள பகவான்பூர் கிராமத்தில் உள்ள ஆற்றில் விவசாயிகள் வேலைக்குச் செல்வதற்காக படகில் இன்று (ஜனவரி 19) பயணம் செய்தனர். 24 பேரை ஏற்றிக் கொண்டு படகு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் படகிலிருந்த ஒருவர் கரைக்கு நீந்தி உயிர் பிழைத்தார். ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்ட நிலையில், 20-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
படகில் பயணம்செய்த விவசாயிகள் பெரும்பாலும் குச்சாய்கோட், விஷம்பர்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த தடை தொடரும் - உயர் நீதிமன்றம்