ETV Bharat / bharat

ஆர்யன் கானுக்கு பிணை மறுப்பு... தந்தைக்கு பறிபோன விளம்பர வாய்ப்பு... - ஆர்யன் கான் கைது

போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.

Aryan Khan
Aryan Khan
author img

By

Published : Oct 8, 2021, 5:36 PM IST

Updated : Oct 9, 2021, 3:44 PM IST

அரபிக் கடலில் சொகுசுக் கப்பல் ஒன்றில் நடந்த விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் அக்டோபர் 4ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஆர்யன் கான் பிணை கோரிய நிலையில், அதன் விசாரணை மும்பை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்யன் கானின் பிணை மனுவை தள்ளுபடி செய்துள்ளார். ஆர்யன் கான்னுடன் சேர்ந்து பிணை கோரியிருந்த ஏழு பேருக்கும் பிணை மறுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வழக்கு விசாரணையின்போது ஆர்யன் கானின் வழக்கறிஞர் நீதிபதிமுன் வாதிடுகையில், "நான் இந்தியன். எனது பெற்றோர் இந்தியாவில் வசிக்கின்றனர். என்னிடம் இந்தியா பாஸ்போர்ட் உள்ளது. நான் அலுவலர்கள் முழு ஒத்துழைப்பைத் தருகிறேன்.

மரியாதைக்குரிய குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். எனவே, நிச்சயம் நாட்டை விட்டு தப்பிச் செல்ல மாட்டேன்" என்றார்.

அதேவேளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜித் சிங், " ஆர்யன் கான் மற்றும் ஆசித் ஆகியோரின் வாட்ஸ் ஆப் உரையாடல் மூலம் பெரிய அளவில் போதைப் பொருள் பரிவர்த்தனை நடைபெற்றது அம்பலமாகியுள்ளது.

எனவே, ஆர்யன் கானுக்கு பிணைத் தரக்கூடாது" என வாதிட்டார். வாதங்களை கேட்டபின் நீதிபதி பிணை மனுவை தள்ளுபடி செய்தார். வழக்கில் கைதான அர்யன் கான் ஆர்த்தர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே ஷாருக் கானுக்கு பல்வேறு விளம்பர வாய்ப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.

இதையும் படிங்க: 'இந்தியா 75' - புதிய வடிவில் வெளியான 'மிலே சுர் மேரா துமாரா' பாடல்

Last Updated : Oct 9, 2021, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.