ETV Bharat / bharat

மரணமடைந்த பிக்பாஸ் பிரபலம் யார்.. சித்தார்த்துக்கு ஏன் கண்ணீர் அஞ்சலி..

author img

By

Published : Sep 2, 2021, 7:14 PM IST

Updated : Sep 3, 2021, 4:01 PM IST

பிரபல பாலிவுட் நடிகரும், பிக்பாஸ் வெற்றியாளுருமான சித்தார்த் சுக்லா இன்று(செப்.2) காலை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனிடையே தமிழ் நடிகர் உயிரிழந்து விட்டதாக நெட்டிசன் ஒருவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பதிவிட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Big Boss
Big Boss

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தவர் சித்தார்த் சுக்லா. இவர் தொலைக்காட்சி தொடர்களிலும், பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துவந்தார். இவர் 2005ஆம் ஆண்டு உலகின் சிறந்த மாடல் என்ற பட்டத்தை பெற்றவர். இதையடுத்து 2019ஆம் ஆண்டு 'பிக்பாஸ்' சீசன் 13இல் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்.

அண்மைகாலமாக, வெப் தொடர்களிலும், தொலைகாட்சி தொடர்களிலும் நடித்து வந்த நிலையில், இன்று காலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, நெட்டின் ஒருவர் தமிழ் நடிகர் சித்தார்த்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுள்ளது. இதனைக் கண்ட சித்தார்த், தனது ட்விட்டர் பக்கத்தில், "என் மீது இணைய வழியாக வெறுப்பும், வன்முறையும் காட்டப்படுகிறது. இதில் எந்த விதத்தில் நாம் குறையப் போகிறோம்" எனத் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் வின்னர் உயிரிழப்பு- பிரபலங்கள் இரங்கல்

Last Updated : Sep 3, 2021, 4:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.