ETV Bharat / bharat

அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு இனிப்பான செய்தி.. இத முதல்ல படிங்க!

அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் இந்தியர்களுக்கு எச்1 பி விசா நடைமுறையை எளிமைபடுத்த அமெரிக்க அதிபர் பைடன் தலைமையிலான அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Modi
Modi
author img

By

Published : Jun 22, 2023, 4:14 PM IST

டெல்லி : அமெரிக்காவில் இந்தியர்கள் தங்கி பணியாற்றுவதற்கு வசதியாக எச்1 பி விசா நடைமுறையை எளிதாக்க பைடன் அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறும் மக்கள், ஸ்கில்டு வொர்க்கர்ஸ் எனப்படும் ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் எச்-1 பி விசா மூலம் அமெரிக்காவில் குடியேறி பணியாற்றி வருகின்றனர். எச்-1 பி விசா மூலம் அமெரிக்காவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையில் மற்ற நாட்டினரை காட்டிலும் அதிகபட்சமாக இந்தியர்கள் உள்ளனர்.

இந்தியர்கள் தங்களது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறி பணியாற்றி வருகின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு 4 லட்சத்து 42 ஆயிரம் எச்1 பி விசா வழங்கப்பட்ட நிலையில், அவற்றில் 73 சதவீதம் பேர் இந்தியர்கள் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவுத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஆண்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவிலே எச்1 பி விசா மூலம் வெளிநாட்டினர் அமெரிக்காவிற்கு வர அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பிட்ட எண்ணிக்கையை தாண்டி எச்1 பி விசா கோரப்படும் நிலையில், குலுக்கள் முறையில் எச்1 பி விசா விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இதனால் அமெரிக்கா சென்று பணியாற்ற வேண்டும் என்ற பல்வேறு இந்தியர்களின் கனவு கலைந்து போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் பைடனின் அழைப்பை ஏற்று 5 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்று உள்ளார். இந்த பயணத்தின் இடையே, எச்1 பி விசாவுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு ஓர் இனிமையான செய்தி வெளியாகி உள்ளது.

ஸ்கில்டு வொர்க்கர்ஸ் பிரிவுகளில் அமெரிக்கா வர முயற்சிக்கும் இந்தியர்களுக்கு எச்1 பி விசா நடைமுறையில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பைலட் திட்டம் என்ற செயல்முறையின் முலம் எச்1 பி விசாவை புதுப்பிக்க வெளிநாடு செல்ல வேண்டிய முறையை ஒழித்து, உள்நாட்டிலே இருந்து கொண்டே எச்1 பி விசாவுக்கான மறுபதிவு விண்ணப்பத்தை இந்தியர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்யும் வசதியை அமெரிக்க அரசு கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன் எச்1 பி விசா மூலம் அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் உள்ளிட்டோர் விசா புதுப்பிக்க வெளிநாடுகளுக்கு சென்று மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய சூழல் இருந்தது. தற்போது அந்த முறையை நீக்கி விட்டு உள்நாட்டில் இருந்து கொண்டே புதுப்பிக்கும் வசதியை கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிகளவிலான இந்தியர்களுக்கு வாய்ப்புகள் பெரும் எனக் கூறப்படுகிறது.

உலகம் புவிசார் அரசியல் சவால்களை எதிர்நோக்கி வரும் நேரத்தில், பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. சமீப காலமாக இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் இணக்கமான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Titanic : இறுதி நிமிடங்களை நெருங்கும் டைட்டானிக் சுற்றுலா.. 5 கோடீஸ்வரர்கள் உயிர் பிழைப்பார்களா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.